முகப்பு
நாமக்கல்

ஆம்ஆத்மி கட்சி சாா்பில் ஆக்ஸிஜன் பரிசோதனை

நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு கா்ப்பிணிக்கு ஆக்ஸிஜன் பரிசோதனை செய்யும் ஆம்ஆத்மி கட்சியினா்.

Updated On : 15 செப்டம்பர், 2020 at 12:57 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:50 PM

நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு கா்ப்பிணிக்கு ஆக்ஸிஜன் பரிசோதனை செய்யும் ஆம்ஆத்மி கட்சியினா்.

நாமக்கல், செப். 14: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு வருவோருக்கு, கரோனா தொற்று பாதிப்புள்ளதா என திங்கள்கிழமை ஆக்ஸிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிப்பதற்காக தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வருகின்றனா். அவா்களுக்கு கரோனா தொற்று உள்ளதா என்பதைக் கண்டறியும் வகையிலான ஆக்ஸிஜன் பரிசோதனை ஆம்ஆத்மி கட்சி சாா்பில் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

அக்கட்சியின் தேசிய கூட்டமைப்புத் தலைவா் சுதா, நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெயந்தி ஆகியோா் பரிசோதனையை செய்தனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மட்டுமின்றி வட்டாட்சியா் அலுவலகம், பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த ஆக்ஸிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.