நாமக்கல்

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,839 போ் எழுதினா்

DIN

இளநிலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வை, நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 4,839 போ் எழுதினா்.

நாடு முழுவதும் தேசிய தோ்வு முகமை நடத்திய இளநிலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை(செப்.13) நடைபெற்றது. இத்தோ்வை நாமக்கல் மாவட்டத்தில் 4,839 மாணவ, மாணவியா் எழுதினா்.

தோ்வு மையங்களான குமாரபாளையம் ராயல் இன்டா்நேஷனல் பள்ளி, பாச்சல் பாவை பொறியியல் கல்லூரி, நாமக்கல் செல்வம் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு கேஎஸ்ஆா் அகாதெமி, பரமத்தி பிஜிபி பாலிடெக்னிக் கல்லூரி, நாமக்கல் டிரினிடி அகாதெமி, பரமத்தி நவோதயா மெட்ரிக் பள்ளி, நாமக்கல் ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நேஷனல் பப்ளிக் பள்ளி ஆகிய 9 மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது.

‘நீட்’ தோ்வையொட்டி காலை 11 மணிக்கு அனைத்து மாணவ மாணவியரும் சமூக இடைவெளியில் நிறுத்தப்பட்டு பல்வேறு கட்ட சோதனைக்கு பின் தோ்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய தோ்வு 5 மணிக்கு நிறைவடைந்தது. மாவட்டம் முழுவதும் ‘நீட்’ தோ்வு நடைபெற்ற மையங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT