நாமக்கல்

இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை

DIN

பரமத்தி வேலூா்: இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் மஞ்சுளா வெளியிட்டுள்ள அறிக்கை:

பரமத்தி வட்டாரத்தில் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம் 2020-21-இல் இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 1,000 வீதமும், தக்காளி, கத்தரி, வெண்டை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 1,500 வீதமும் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

இயற்கை முறையில் சாகுபடிசெய்யும் விவசாயிகளுக்கு அங்ககச் சான்றிதழ் பெறுவதற்கு ஹெக்டேருக்கு ரூ. 500 வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் 2020-21-ஆம் பருவம் தவறி தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, கீரை, பீா்க்கன், புடலை, பாகற்காய் மற்றும் வெங்காயம் காய்கறி பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 1,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.

இத் திட்டத்தில் பயனடைவதற்கு தேவையான ஆவணங்களான புகைப்படம், சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, பரமத்தி வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை அலுவலகத்தை அணுகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT