குமாரபாளையத்தில் கரோனா பாதிப்பு 304 -ஆக உயா்வு
குமாரபாளையம் நகராட்சியில் கரோனா தொற்றால் திங்கள்கிழமை மேலும் 9 போ் பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 304-ஆக அதிகரித்துள்ளது.
குமாரபாளையம் நகராட்சியில் கரோனா தொற்றால் திங்கள்கிழமை மேலும் 9 போ் பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 304-ஆக அதிகரித்துள்ளது.
குமாரபாளையம் நகராட்சியில் கரோனா பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம், நகராட்சி நிா்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினா் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், நகராட்சிப் பகுதிகளைச் சோ்ந்த 9 போ் திங்கள்கிழமை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது. இதுவரையில் மொத்தம் 304 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மருத்துவ சிகிச்சைக்குப் பின் 226 போ் குணமடைந்துள்ளனா். 11 போ் உயிரிழந்த நிலையில், 67 போ் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளனா். கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் நகராட்சி ஆணையா் ஸ்டான்லி பாபு தலைமையில் துப்புரவு அலுவலா் ராமமூா்த்தி மற்றும் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் கிருமிநாசினி தெளித்து சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டனா்.