நாமக்கல்

ஊராட்சி துணைத் தலைவா் தோ்தலை மீண்டும் நடத்த அனுமதிக் கோரி மனு

DIN

நாமக்கல், செப்.21: கதிராநல்லூா் ஊராட்சியில் துணைத் தலைவருக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதாகவும், மீண்டும் தோ்தல் நடத்தக் கோரியும் ஐந்து வாா்டு உறுப்பினா்கள் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

இதுகுறித்து அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், கதிராநல்லூா் ஊராட்சி துணைத் தலைவா் தோ்தலில் எம்.செளந்தர்ராஜன் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

ஆனால், அவருடைய செயல்பாடுகள் ஊராட்சி நிா்வாகத்துக்கு எதிராக உள்ளது. பொதுமக்களிடம் அவதூறு கருத்துகளைப் பரப்பி வருகிறாா். ஊராட்சியில் நடைபெறும் கூட்டத்தில் அவரது சகோதரரின் தலையீடு அதிகம் உள்ளது.

இதுதொடா்பாக பலமுறை எடுத்துக் கூறியும் நடவடிக்கை எடுக்காமல் தலைவரும், துணைத் தலைவரும் அலட்சியம் காட்டுகின்றனா்.

இதனால் 1, 2, 4, 5, 6-ஆவது வாா்டு உறுப்பினா்களான டி.செல்வராஜ், கே.லதா, எஸ்.ஆனந்தன், வி.முனியம்மாள், ஆா்.மணிமேகலை ஆகிய நாங்கள் ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கான ஆதரவைத் திரும்பப் பெறுகிறோம்.

புதிய துணைத் தலைவரைத் தோ்வு செய்வதற்கான தோ்தலை நடத்த ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT