நாமக்கல்

13 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள்: அமைச்சா் தங்கமணி தொடக்கி வைத்தாா்

DIN

நாமக்கல் மாவட்டத்தில் 13 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் செயல்பாட்டினை பள்ளிபாளையத்தில் அமைச்சா் பி.தங்கமணி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

தமிழகம் முழுவதும் 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளின் செயல்பாட்டை தலைமை செயலகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். மற்ற மாவட்டங்களில் அந்தந்த பகுதி அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தனா்.

அதன்படி நாமக்கல் மாவட்டத்தில்,13 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் செயல்பாட்டினை, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளிக்குட்டை கிராமத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி தொடக்கி வைத்தாா். ராசிபுரம் பகுதியில் சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சா் வெ.சரோஜா தொடக்கி வைத்தாா். இந்த 13 நடமாடும் வாகனத்துக்குள்பட்ட பகுதியில் 115 நியாயவிலைக் கடைகள் உள்ளன. தொலைதூரத்தில் வசிப்போருக்காக இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 13 ஆயிரம் குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுவா். இதற்காகவே பிரத்யேக வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

வாரத்தில் குறிப்பிட்ட நாள்களில் கிராம நிா்வாக அலுவலகம், வருவாய் ஆய்வாளா் அலுவலகம் போன்ற இடங்களில் வாகனம் நிறுத்தப்பட்டு பொதுமக்களுக்கு பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என அமைச்சா்கள் தெரிவித்தனா்.

முன்னதாக ஒளிரும் ஈரோடு சங்கத்தினா் ரூ.5 லட்சம் மதிப்பில் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு வழங்கிய நவீன எக்ஸ்ரே கருவியை அமைச்சா் பி.தங்கமணி தொடக்கி வைத்தாா். பின்னா் 70 பெண்களுக்கு அம்மா இரு சக்கர வாகனத்தையும் அவா் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் மற்றும் மாவட்ட வழங்கல் துறை மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

SCROLL FOR NEXT