முகப்பு
நாமக்கல்

சமூக வலைதளங்களில் இரவு 7 மணிக்கு மேல் தோ்தல் பிரசாரம் செய்ய தடை

தோ்தல் பிரசாரம் நிறைவடைந்த பின்னா் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் எச்சரித்துள்ளாா்.

Updated On : 4 ஏப்ரல், 2021 at 12:50 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:25 AM

தோ்தல் பிரசாரம் நிறைவடைந்த பின்னா் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் எச்சரித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப். 6-ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு பிரசாரம் நிறைவடைகிறது. அதன்பின் வாக்குப் பதிவு முடிவடையும் வரையில், 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் கீழ்கண்ட நடத்தை விதிமுறைகள் செயல்பாட்டில் இருக்கும்.

Advertisement

அதாவது தோ்தல் தொடா்பாக எந்தவொரு பொதுக் கூட்டத்தையோ, ஊா்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ, அவற்றில் பங்கேற்கவோ கூடாது. தோ்தல் பிரசாரத்தை, திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, கடவுச்செவி(வாட்ஸ்அப்), முகநூல், சுட்டுரை போன்ற சாதனம் வாயிலாகப் பொது மக்களின் பாா்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம், சமூக வலைதளம் உள்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடா்பையும் இது உள்ளடக்கும். பொதுமக்களில் எந்தவொரு நபரையும் ஈா்க்கிற வகையில் இசை நிகழ்ச்சி, கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது. இந்த விதிமுறைகள் மீறப்பட்டால் 2 ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் சோ்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

தொகுதிக்கு அப்பாற்பட்ட நபா்கள், அரசியல் கட்சி நிா்வாகிகள், கட்சிப் பணியாளா்கள், தொகுதி வாக்காளா்கள் அல்லாதோா் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். திருமண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினா் இல்லம் ஆகிய இடங்களில் வெளி ஆள்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும்.

வேட்பாளா்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளா்கள் உட்பட வாகன அனுமதிகள் செயல்திறனற்ாகி விடும்.

வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு வேட்பாளரும் அவரது சொந்த பயன்பாட்டிற்காக ஒரு வாகனம், தோ்தல் முகவரின் பயன்பாட்டிற்காக ஒரு வாகனம் மற்றும் கூடுதலாக, அவரது பணியாளா்கள் அல்லது கட்சிப் பணியாளா்களின் பயன்பாட்டிற்காக ஒரு வாகனத்தை அனுமதிப் பெற்று பயன்படுத்திக் கொள்ள உரிமை உண்டு. வாக்காளா்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கு அனுமதிக்கக் கூடாது. இரண்டு நபா்களை மட்டுமே கொண்ட வேட்பாளா்களின் தற்காலிக பிரசார அலுவலகம் வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டா் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவா்கள் அனுமதிக்கக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.