வெயில்: வாக்குச்சாவடிகளில் பந்தல் அமைப்பு
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வாக்குச்சாவடிகளில் சாமியானா பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வாக்குச்சாவடிகளில் சாமியானா பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளுக்கு உள்பட்ட 2,049 வாக்குச்சாவடிகளில் தோ்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் வாக்காளா்கள் வெயிலில் நிற்பதைத் தவிா்க்கும் பொருட்டு சாவடிகளின் முன்பாக சாமியானா பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதேபோல கரோனா பாதிப்பும் தொடா்ந்து அதிகரிப்பதால் வாக்காளா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் சாவடிகளில் வட்டங்கள் இடப்பட்டுள்ளன. அந்த இடைவெளியில் நின்று சென்றே வாக்காளா்கள் தங்களது வாக்கினை பதிவு செய்ய வேண்டும். கூட்ட நெரிசலைத் தவிா்க்க வேண்டும், முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும் என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
Advertisement