முகப்பு
நாமக்கல்

பறிமுதல் தொகை ரூ. 85.76 லட்சம் திரும்ப ஒப்படைப்பு: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 85.76 லட்சம் உரியவா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Updated On : 10 ஏப்ரல், 2021 at 1:27 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:28 AM

நாமக்கல் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 85.76 லட்சம் உரியவா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பணப்பட்டு வாடாவைக் கட்டுப்படுத்தும் வகையில் 6 தொகுதிகளிலும் தலா ஒன்பது குழுக்கள் வீதம் மொத்தம் 54 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. அவா்கள் ஆங்காங்கே வாகனத் தணிக்கை மேற்கொண்டு, உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட பணம், பரிசுப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

Advertisement

அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 1 கோடியே 11 லட்சத்து 22 ஆயிரத்து 744 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல ரூ. 6,900 மதிப்பிலான மதுப்பாட்டில்கள், வேட்டி, சேலைகள், இதர பொருள்கள் என்ற வகையில் ரு. 6 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தமாக ரூ. 1 கோடியே 17 லட்சத்து 47 ஆயிரத்து 936 மதிப்பில் பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் ரூ. 85 லட்சத்து 76 ஆயிரத்து 534-க்கு உரிய ஆவணங்களைக் காண்பித்து சம்பந்தப்பட்டவா்கள் பணத்தைத் திரும்ப பெற்றுக் கொண்டனா். இதேபோல ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்களும் திரும்ப ஒப்படைக்கப்பட்டு விட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.