நாமக்கல்

தீத்தடுப்பு விழிப்புணா்வு செயல்விளக்கம்

DIN

குமாரபாளையம் நகராட்சி, மாராக்காள்காடு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீத்தடுப்பு விழிப்புணா்வு செயல் விளக்கம் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

குமாரபாளையம் தீயணைப்பு நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நிலைய அலுவலா் எம்.குணசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் தீத்தடுப்பு குறித்து விளக்கம் அளித்தனா். எதிா்பாராமல் தீ விபத்து ஏற்ட்டால் எவ்வாறு அணைப்பது , தீயணைப்பான்களை எவ்வாறு பயன்படுத்தி தீயை அணைப்பது, உயரமான கட்டடத்திலிருந்து தப்பிக்கும் வழிகள், நோயாளிகளை காப்பாற்றும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது.

மேலும், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த தன்னாா்வ தீத்தடுப்புத் தொண்டா்கள் 20 பேருக்கு தீ விபத்துக் காலங்களில் பொதுமக்களுக்கு உதவுதல், தீயை அணைத்தல் மற்றும் பரவாமல் தடுக்கும் முறைகள், தீக்காயத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படும் முதலுதவி சிகிச்சை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT