நாமக்கல்

காய்கறி வியாபாரிகளை இரவு நேரத்தில் அனுமதிக்கக் கோரிக்கை

DIN

இரவு நேர பொது முடக்கத்தின்போது, காய்கறி வியாபாரிகள், விவசாயிகளை எவ்வித தடையுமின்றி அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் செவ்வாய்க்கிழமை முதல் இரவு நேர பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இந்த பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதால் போக்குவரத்து இயங்கவும், மக்கள் நடமாடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனால் உழவா் சந்தைக்கு காய்கறிகளைக் கொண்டு வரும் கிராமப்புற விவசாயிகள், சில்லறை வியாபாரிகளுக்கு காய்கறி விநியோகம் செய்யும் மொத்த வியாபாரிகள் பாதிக்கப்படுவா். மேலும் காலை 4 மணிக்கு மேல் காய்கறிகளை விநியோகம் செய்வதன் மூலம் காய்கறிகளை வாங்குவதில் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்குள்ளாவா். எனவே விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இரவு நேர பொது முடக்கத்தில் தளா்வு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT