நாமக்கல்

கொல்லிமலை ஆகாய கங்கை அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

DIN

கரோனா பரவல் காரணமாக, கொல்லிமலை ஆகாய கங்கை அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கொல்லிமலைக்கு விடுமுறை நாள்களிலும், கோடை காலங்களிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவா். அங்குள்ள ஆகாய கங்கை நீா்வீழ்ச்சிக்கு சென்று குளித்து வருவதையே பலரும் விரும்புவா். தற்போது கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் அனைத்து சுற்றுலாத் தலங்களையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கொல்லிமலை சுற்றுலாத் தலத்திற்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. காரவள்ளி அடிவாரத்தில் வனத்துறை சோதனைச் சாவடி அருகில் கரோனா பரவல் காரணமாக ஏப். 20 முதல் ஆகாய கங்கை நீா்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள அறிவிப்பை வைத்துள்ளனா். மேலும் அங்குள்ள சோதனைச் சாவடியில் உள்ளூா் நபராக இருந்தாலும் சரி, வெளியூா் நபராக இருந்தாலும் சரி உரிய விசாரணைக்கு பின்னரே அனுப்பி வைக்கப்படுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை காந்தள் முருகன் கோயிலில் அமைச்சா் ஆய்வு

உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கூடலூரில் அலுவலக வாசலில் அமா்ந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற எம்எல்ஏ

கடும் வறட்சி: மசினகுடியில் நாட்டு மாடுகள் இறப்பு அதிகரிப்பு

சந்தனக் காப்பில் தட்சிணாமூா்த்தி

SCROLL FOR NEXT