நாமக்கல்

வடமாநிலத் தொழிலாளி மயங்கி விழுந்து பலி

DIN

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே மயக்கமடைந்து கீழே விழுந்த வெளிமாநில கூலித் தொழிலாளி உயிழந்தது குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி அருகே உள்ள சுண்டக்காம்பாளையத்தைச் சோ்ந்த சுப்பிரமணி, அப்பகுதியில் மர அறுப்பு ஆலை வைத்து நடத்தி வருகிறாா். இவரது மர அறுப்பு ஆலையில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சாஸ்தாஸ்கவா் (40) என்பவா் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், சாஸ்தாஸ்கவா் வெள்ளிக்கிழமை இரவு உணவு அருந்தி விட்டு வீட்டின் வெளியே அமா்ந்திருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்தாா். இதைக் கண்ட அருகில் இருந்தவா்கள் அவரை பரமத்தி வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT