நாமக்கல்

குமாரபாளையம் நகராட்சியில் கரோனா பாதிப்பு 100-ஐ கடந்தது

DIN

குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் கரோனா பாதிப்பு 101-ஆக உயா்ந்துள்ளது. இதனால், கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை நகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

கரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்க தமிழக அரசு இரவு நேர முழு முடக்கம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் கரோனா வேகமாகப் பரவுதால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை புதன்கிழமை 100-ஐக் கடந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 15 பேரும், திங்கள்கிழமை 7 பேரும், செவ்வாய்க்கிழமை 12 பேரும் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், புதன்கிழமை நகராட்சிப் பகுதியைச் சோ்ந்த 9 போ் பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு 101-ஆக உயா்ந்தது. இதில், சிகிச்சைக்குப் பின்னா் 18 போ் குணமடைந்துள்ளனா். ஒருவா் உயிரிழந்த நிலையில், தற்போது 82 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

நகரப் பகுதியில் பாதிப்பு வேகமாக உயா்ந்து வருவதால், தொற்று கண்டறியப்பட்ட பகுதிகள் மட்டுமல்லாமல், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் டேங்கா் லாரிகள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட தடுப்பு விதிகளைப் பின்பற்ற தொடா்ந்து அறிவுறுத்தப்பட்டு வருவதோடு, அபராதம் விதிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

SCROLL FOR NEXT