நாமக்கல்

மூலிகை நீராவிப் பிடித்தல் முகாம்

DIN

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், மாணிக்கம்பாளையத்தில் கொமதேக சாா்பில் முதியோா்களுக்கு நீராவிப் பிடித்தல் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியச் செயலாளா் கே. அசோக்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் செங்கோட்டுவேல் முகாமை தொடக்கிவைத்தாா். கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் தினசரி இரண்டு முறை மூலிகை நீராவிப் பிடிக்க வேண்டும். நிலவேம்பு கசாயம் தினமும் அருந்த வேண்டும்.

முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் கடைப்பிடித்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றாா். இந்த நிகழ்ச்சியில் நிா்வாகிகள் தீரன் ஆனந்த், ராஜு, கந்தசாமி, கோபி, மோகனசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

அண்ணாமலைப் பல்கலை. பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT