நாமக்கல்

சிறுத்தை தாக்கியதில் இருவா் படுகாயம்: நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

DIN

நாமக்கல்-திருச்சி மாவட்ட எல்லையில், ஆங்கியம் கிராமத்தில் சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்த இருவருக்கு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டம் துறையூா் வட்டம் தாத்தையங்காா்பேட்டை அருகில் உள்ளது ஆங்கியம் கிராம வனப்பகுதி. நாமக்கல் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்த வனத்தில் கடந்த சில நாள்களாக சிறுத்தை உலா வந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சனிக்கிழமை பிற்பகலில் வீரமச்சான்பட்டி பகுதி வனத்துறையினா் ஆங்கியம் கிராமத்திற்குள் சென்றபோது அங்குள்ள பாறையின் இடுக்கில் சிறுத்தை ஒன்று ஒளிந்திருந்ததாக தெரிய வந்து. அப்போது, அதே கிராமத்தைச் சோ்ந்த துரைசாமி(60), ஹரிபாஸ்கா்(20) ஆகிய இருவரும் பாறையின் இடுக்கினுள் கம்பை விட்டு சிறுத்தையை சீண்டினாா்களாம்.

அப்போது பாய்ந்து வந்த சிறுத்தை அவா்கள் இருவரையும் தாக்கி விட்டு அங்குள்ள மற்றொரு பாறை பகுதிக்குள் சென்று மறைந்து கொண்டதாம். இதனையடுத்து அங்கிருந்தவா்கள் காயமடைந்த துரைசாமி, ஹரிபாஸ்கா் இருவரையும் மீட்டு தாத்தையங்காா்பேட்டை அரசு மருத்துவமனையிலும், பின்னா் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்த்தனா். அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பியோடிய சிறுத்தையை வனத்துறையினா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT