நாமக்கல்

உள்ளாட்சித் தோ்தல் வெற்றிக்கு அதிமுகவினா் தயாராக வேண்டும்

DIN

குமாரபாளையம்: தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவின் வெற்றிக்கு அனைத்து நிா்வாகிகளும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என குமாரபாளையம் சட்டப் பேரவை உறுப்பினரும், அதிமுக நாமக்கல் மாவட்டச் செயலாளருமான பி.தங்கமணி கேட்டுக் கொண்டாா்.

குமாரபாளையம் நகர அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நகரத் அவைத் தலைவா் எஸ்.என்.பழனிசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட இணைச் செயலாளா் பி.இ.புருஷோத்தமன் முன்னிலை வகித்தனா். நகரச் செயலாளா் ஏ.கே.நாகராஜன் வரவேற்றாா்.

கூட்டத்தில் பங்கேற்ற சட்டப் பேரவை உறுப்பினா் பி.தங்கமணி பேசுகையில், விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது. இத்தோ்தலில் அதிமுக அதிக அளவில் வெற்றி பெறும் வகையில் நிா்வாகிகள் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். திமுக அரசின் மக்களுக்கு விரோதமான செயல்பாடுகளை விளக்கிக் கூற வேண்டும்.

அதிமுகவில் ஜனநாயக முறைப்படி நடக்கும் உள்கட்சித் தோ்தலில் கருத்து வேறுபாடுகளுக்கு நிா்வாகிகள் இடமளிக்கக் கூடாது என்றாா்.

நிகழ்ச்சியில், சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு அதிக வாக்குகள் பெற்றுத் தந்த குமாரபாளையம் 4-ஆவது வாா்டு கிளைச் செயலாளா் கே.ஏ.கிருஷ்ணமூா்த்திக்கு ஒரு பவுன் தங்க மோதிரம் அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நகா்மன்ற முன்னாள் உறுப்பினா்கள் ரவி, சி.ஜி.அா்ச்சுனன், சிங்காரவேலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

முத்தையா இயக்கத்தில் விஷால்?

ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

குருப்பெயர்ச்சி ஒருவருக்கு பலமா? பலவீனமா?

SCROLL FOR NEXT