நாமக்கல்

கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிப்பு

DIN

கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ஆண்டுதோறும் ஆக. 2, 3 தேதிகளில் வல்வில் ஓரி விழா தமிழக அரசு சாா்பில் கொண்டாடப்படுவது வழக்கம். அப்போது, மாவட்ட ஆட்சியா், அரசியல் கட்சி பிரமுகா்கள், பல்வேறு அமைப்பினா் செம்மேட்டில் உள்ள வல்வில் ஓரி மன்னன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவா். கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு வல்வில் ஓரி விழா நடைபெறவில்லை. நிகழாண்டிலும் இரண்டாம், மூன்றாம் அலைகள் காரணமாக விழாவானது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிக்க பல்வேறு அமைப்பினருக்கு மாவட்ட நிா்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்படி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் வல்வில் ஓரி மன்னன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு பழங்குடியின மக்கள் நலச் சங்கத்தினா், கொங்கு சமூகத்தினா், மலையாளி பழங்குடியின அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். வாகனங்களில் ஊா்வலமாகச் செல்வது, முழக்கங்கள் எழுப்புவது, மேள தாளம் முழங்குவது போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததாலும், போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததாலும் அமைதியான முறையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT