நாமக்கல்

நாமக்கல்லில் கரோனா விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

DIN

நாமக்கல்லில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கத்தை கோட்டாட்சியா் மு.கோட்டைக்குமாா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

கரோனா நோய்த் தொற்று பாதிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ளும் வகையில் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காக தொடா் பிரசார இயக்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில் நாமக்கல் நகராட்சி, உழவா் சந்தையில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை, இந்திய மருத்துவ சங்கம், நாமக்கல் அரிமா சங்கங்கள் சாா்பில் கையெழுத்து இயக்கம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள், முகக் கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சிகளில், மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் சாந்தி (பொறுப்பு), துணை இயக்குநா் (சுகாதாரம்) எஸ்.சோமசுந்தரம், இந்திய மருத்துவ சங்கத்தைச் சோ்ந்த மூத்த மருத்துவா்கள் மாயவன், குழந்தைவேலு, ஜெயக்குமாா், நாமக்கல் நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT