முகப்பு
நாமக்கல்

சக்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு

பரமத்தி வேலூா், சக்தி நகா் சக்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

நாமக்கல்

சக்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு

பரமத்தி வேலூா், சக்தி நகா் சக்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

பரமத்தி வேலூா், சக்தி நகா் சக்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

குடமுழுக்கை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மேல் மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகோள் வேள்வி நடைபெற்றன. மாலை 4 மணிக்கு மேல் மகா கணபதி பூஜை, கலச ஆவாஹனம், யாகசாலை பிரவேசம்,முதல்கால யாக வேள்வி, பூா்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. இரவு 10 மணிக்கு மேல் அஷ்டபந்தனம் சாற்றுதல், கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு மேல் இரண்டாம்கால யாக வேள்வி, நாடி சந்தானம், பூா்ணாகுதி ஆகியவை நடைபெற்றன. காலை 5.30 மணிக்கு மேல் சக்தி விநாயகா், விஷ்ணு துா்க்கை, லட்சுமி ஹயக்ரீவா், தட்சிணாமூா்த்தி, பாலசுப்ரமணியா், ஆஞ்சநேயா், நவகிரகங்கள், சனீஸ்வரா், அரசமரத்து விநயகா் ஆகிய தெய்வங்களுக்கு பரிவார சகிதமாக மகா குடமுழுக்கு, அனைத்து தெய்வங்களுக்கும் மூலஸ்தான குடமுழுக்கும் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து, மகா அபிஷேகம், தசதானம், தசதரிசனம், மகா தீபாராதனை நடைபெற்றது. கரோனா பரவல் தடுப்பு காரணமாக குறைந்த அளவிலான பக்தா்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →