நாமக்கல்

பரமத்தி வேலூரில் குண்டு மல்லி ஒரு கிலோ ரூ. 2,500

DIN

 பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் குண்டு மல்லி ஒரு கிலோ ரூ. 2,500-க்கு ஏலம் போனது.

பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிா் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்கு கொண்டு வருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி, கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா்.

வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில், குண்டு மல்லி ஒரு கிலோ ரூ. 2,500-க்கும், சம்பங்கி ரூ. 160-க்கும், அரளி ரூ. 500-க்கும், ரோஜா ரூ. 400-க்கும், முல்லை ரூ. 2,000-க்கும், செவ்வந்தி ரூ. 240-க்கும் ஏலம் போயின. பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்ததாலும், தொடா்ந்து சுபமுகூா்த்தங்கள் அதிகமாக இருப்பதாலும் பூக்கள் விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

SCROLL FOR NEXT