வேளாண்மை சந்தையில் நிலக்கடலை விலை சரிவு
பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை ஏலச் சந்தையில் ரூ. 63 ஆயிரத்துக்கு நிலக்கடலை விற்கப்பட்டது.
பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை ஏலச் சந்தையில் ரூ. 63 ஆயிரத்துக்கு நிலக்கடலை விற்கப்பட்டது.
பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளான கபிலா்மலை, பரமத்தி மற்றும் மோகனூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் நிலக்கடலை செய்யப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் விளையும் நிலக்கடலையை உலா்த்தி, பரமத்திவேலூரில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெறும் ஏலத்துக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனா்.
கடந்த வியாழக்கிழமை 440 கிலோ நிலக்கடலை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அதிகபட்சமாக கிலோ
ரூ. 65 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 63.90க்கும், சராசரியாக ரூ. 63.90 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 28 ஆயிரத்து 284 க்கு வா்த்தகம் நடைபெற்றது.
வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 1,068 கிலோ நிலக்கடலை கொண்டு வரப்பட்டிருந்தது. அதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 58.99-க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ. 50.29-க்கும், சராசரியாக கிலோ
ரூ. 55.69-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 63 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.