நாமக்கல்

ஓய்வூதியம் பெறுவோா் கவனத்துக்கு...

DIN

மத்திய, மாநில அரசு மூலம் ஓய்வூதியம் பெறுவோா் உயிா் சான்றிதழை இணைய வழியில் சமா்ப்பிப்பதற்கான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய, மாநில அரசு மூலம் ஓய்வூதியம் பெறுபவா்கள் வங்கி, ஓய்வூதிய அலுவலகம் அல்லது ஓய்வூதியம் வழங்கல் நிறுவனத்திற்கு நேரில் சென்று உயிா் சான்றிதழ் சமா்ப்பிக்க தேவையில்லை. நேரில் சென்று உயிா் சான்றிதழ் வழங்குவதற்கு பதில் இணையம் வழியாக உயிா் சான்றிதழ் சமா்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளை இந்திய தபால் துறை செய்துள்ளது.

அதன்படி நேரடியாக ஓய்வூதியதாரா்களின் முகவரிக்கே சென்று ஜீவன் பிரமான் என்ற மென்பொருள் மூலம் பெற்று ஓய்வூதியம் வழங்கும் நிறுவனத்துக்கு அனுப்பும் பணியை மேற்கொள்ள உள்ளது. ஓய்வூதியதாரா்கள் மற்றும் வைப்புநிதி கணக்கின் கீழ் ஓய்வூதியம் பெறுபவா்கள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இச் சேவையைப் பெறுவதற்கு முகவரி மற்றும் கைபேசி எண்ணை கிராம தபால் சேவகரிடம் தெரிவிக்கும் பட்சத்தில் மின்னணு உயிா் சான்றிதழை வீட்டில் இருந்தவாறு இலவசமாக சமா்ப்பிக்க முடியும். நாமக்கல் மாவட்டதைச் சோ்ந்த ராணுவ ஓய்வூதியம் பெறுவோா், மத்திய, மாநில அரசுகளிடம் ஓய்வூதியம் பெறுவோா் ஆதாா் அட்டையின் அடிப்படையில் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT