நாமக்கல்

வாக்காளா் பட்டியல் தயாரிப்பு ஆலோசனைக் கூட்டம்

DIN

நாமக்கல் மாவட்டத்தில், வாக்காளா் பட்டியல் தயாரிப்புப் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம், ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

இதில், வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் எ.ஞானசேகரன் பங்கேற்று, தோ்தல் பிரிவு மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பட்டியல் தயாரிப்புப் பணிகளின் நிலவரம் குறித்து கேட்டறிந்தாா்.

கூட்டத்தில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கப்பட்ட 18 வயது பூா்த்தியடைந்த அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நவம்பா் 30-இல் முடிவுற்ற பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்ற படிவங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். ஜன.5-ஆம் தேதி பட்டியல் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்டவை தொடா்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதில், திருச்செங்கோடு கோட்டாட்சியா் தே.இளவரசி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) த.சிவசுப்பிரமணியன், தனி வட்டாட்சியா் (தோ்தல்) சுப்ரமணியன் மற்றும் தோ்தல் பிரிவு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

நாசரேத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT