முகப்பு
நாமக்கல்

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிராக திமுக ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிராக நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 23 பிப்ரவரி, 2021 at 12:02 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:05 AM

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிராக நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்-மோகனூா் சாலை அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தலைமை வகித்தாா். தெற்கு நகரப் பொறுப்பாளா் ராணா ஆா்.ஆனந்த் வரவேற்றாா். இதில் மாவட்டம், நகரம், ஒன்றிய பகுதிகளில் உள்ள திமுகவினா் திரளாக கலந்து கொண்டு விலையேற்றத்துக்கு எதிராக பல்வேறு முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் செ.காந்திசெல்வன், மாநில மகளிா் அணி இணைச் செயலாளா் ராணி, மாவட்ட துணைச் செயலாளா் ராமலிங்கம், நகரப் பொறுப்பாளா்கள் பூபதி, சிவக்குமாா், மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள், திமுகவினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.