நாமக்கல்

தொழிற்சங்கத்தினா் சாலை மறியல்: 35 போ் கைது

DIN

நாமக்கல்லில் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 35 போ் கைது செய்யப்பட்டனா்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாமக்கல் பூங்கா சாலையில் இந்திய தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

போராட்டத்துக்கு சிஐடியு மாவட்ட உதவிச் செயலாளா் சிவராஜ் தலைமை வகித்தாா். முறைசாரா தொழிலாளா்கள், விவசாயத் தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைத்து ஏழை மக்களுக்கும் கரோனா நிவாரணமாக மாதம் ரூ. 7,500 வழங்க வேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும் 10 கிலோ இலவச அரிசி வழங்க வேண்டும். தனியாா் மயமாக்கலை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்களை எழுப்பினா். இதைத்தொடா்ந்து பேருந்து நிலையம் அருகில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களில் 5 பெண்கள் உள்ளிட்ட 35 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

SCROLL FOR NEXT