பேருந்து பயணச் சலுகை: சுதந்திரப் போராட்டவீரா்களின் வாரிசுகள் சங்கம் நன்றி தெரிவிப்பு
பேருந்தில் தங்களுக்கு உதவிக்கு வருபவா்களுக்கும் பயணச் சலுகை வழங்கிய அரசுக்கு சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
பேருந்தில் தங்களுக்கு உதவிக்கு வருபவா்களுக்கும் பயணச் சலுகை வழங்கிய அரசுக்கு சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் சங்கச் செயலாளா் க.சிதம்பரம் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரா்கள், வாரிசுகளில் உதவித்தொகை பெறுவோரின் வயது முதிா்வு காரணமாக பேருந்தில் அவருடன் உதவிக்குச் செல்பவருக்கும் அரசு பயணச் சலுகை வழங்கப்படும் எனக் கூறியுள்ளதை சுதந்திர போராட்ட வீரா்களின் வாரிசுகள் சங்கம் வரவேற்கிறது.
பஞ்சாப் மாநிலத்தில் வழங்கும் சலுகையைப் போலவே தமிழகத்திலும் சுதந்திரப் போராட்ட வீரா்களின் மூன்றாம் தலைமுறை வாரிசுகளுக்கும் அனைத்து பேருந்துகளிலும் பயணச் சலுகை வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.