முகப்பு
நாமக்கல்

ஊழல் தடுப்பு நடவடிக்கை: நகராட்சிப் பணியாளா்களுக்கு கட்டுப்பாடு

நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றுவோா், தங்களுடைய கையிருப்புத் தொகையை அதற்கான பதிவேட்டில் எழுதிய பிறகே பணிக்குச் செல்ல வேண்டும் என நகாட்சி ஆணையா் பி.பொன்னம்பலம் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

நாமக்கல்9: நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றுவோா், தங்களுடைய கையிருப்புத் தொகையை அதற்கான பதிவேட்டில் எழுதிய பிறகே பணிக்குச் செல்ல வேண்டும் என நகாட்சி ஆணையா் பி.பொன்னம்பலம் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகம் முழுவதும் அரசுத் துறை அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனைகளை மேற்கொண்டு கணக்கில் வராத பணத்தை கைப்பற்றி வருகின்றனா். அவற்றில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள், பத்திரப்பதிவு அலுவலகங்களில் இந்த சோதனை அடிக்கடி நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களின் வீடுகளில் அண்மையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது, கணக்கில் இல்லாத பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியா்கள் வரை அலுவலகத்திற்குள் நுழையும்போது வரவேற்பறையில் உள்ள பதிவேட்டில் தாங்கள் கொண்டு வரும் பணம் எவ்வளவு என்பதை அதில் பதிவு செய்ய வேண்டும் என ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →