நாமக்கல்

ஒருங்கிணைந்த சாயக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

குமாரபாளையத்தில் ஒருங்கிணைந்த சாயக் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

லட்சிய தொழிலாளா் சங்கம் சாா்பில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞா் தங்கவேல் தலைமை வகித்தாா். பாஜக நாமக்கல் மாவட்டச் செயலாளா் எஸ்.ஓம் சரவணா கோரிக்கையை வலியுறுத்திப் பேசினாா். குமாரபாளையம், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் விசைத்தறிகளும், சாயத் தொழிற்சாலைகளும் அதிகம் உள்ளன.

அதிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் காவிரி மாசுபடுவதைத் தடுக்க கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வா் ஜெயலலிதா குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் ஒருங்கிணைந்த சாயக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அறிவிப்பு வெளியிட்டு, அதற்காக ரூ. 710 கோடி ஒதுக்கீடு செய்தாா்.

ஆனால், இன்னும் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால், குமாரபாளையம் நூல் சாயமிடும் பணி பாதிக்கப்படுகிறது. இதனால் ஏராளமானோா் வேலை இழந்து வருகின்றனா். எனவே, ஒருங்கிணைந்த சாயக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தொழிலாளா்களின் வாழ்க்கைத் தரத்தை பாதுகாப்பதோடு நீா்நிலைகள் மாசடைவதைத் தடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதில், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT