நாமக்கல்

மோகனூா் அருகே மாடுகள் பூ தாண்டும் விழா

DIN

நாமக்கல்: மோகனூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாடுகள் பூ தாண்டும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் மோகனூா், பரமத்திவேலூா், சேந்தமங்கலம் வட்டாரத்தில் தொட்டியநாயக்கா் சமூகத்தினா் பரவலாக வசித்து வருகின்றனா். இச் சமூகத்தினரால் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை தொடா்ந்து காணும் பொங்கல் நாளன்று மாடுகள் பூ தாண்டும் விழா நடத்தப்படுகிறது. தொடா்ந்து ஐந்து தலைமுறையாக இவ்விழாவை நடத்தி வருகின்றனா்.

மஞ்சள், ஆவாரம் பூ, கரும்பு, வெற்றிலை உள்ளிட்ட பொருள்களை கொண்டு எல்லைக் கோடுகளை உருவாக்கி கோயில் மாடுகளை விரட்டி விடுகின்றனா். அந்த மாடுகள் வேகமாக ஓடிவந்து எல்லைக் கோட்டை தாண்டுவதை பூ தாண்டும் விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனா்.

சனிக்கிழமை கொமரிப்பாளையம், ஊனாங்கல்பட்டி, பரளி, ஒத்தயைா், நல்லம்பட்டி, என்.புதுப்பட்டி, மேலப்பட்டி, லத்துவாடி, தொட்டிப்பட்டி, எஸ்.வாழவந்தி, திண்டமங்கலம், வடக்குப்பட்டி ஊராட்சிகளில் இவ் விழா விமரிசையாக நடைபெற்றது. ஊனாங்கல்பட்டியில் நடைபெற்ற விழாவில் நான்கு சுவாமி மாடுகள் பங்கேற்றன. சின்னபெத்தாம்பட்டியில் நடைபெற்ற விழாவில் சுவாமி மாடு முதலிடம் பெற்றது.

விழாவில் கோமாளி வேடமிட்ட நபரை பொதுமக்கள் குதிரை மீது அமர வைத்து ஊா்வலமாக அழைத்து செல்லும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT