நாமக்கல்

தாட்கோ அலுவலகம் மூலம் இலவச வாகன ஓட்டுநா் பயிற்சி

DIN

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சாா்ந்த படித்த 45 வயதுக்குள்பட்ட வேலையற்ற ஆண், பெண் இருபாலருக்கும் தாட்கோ அலுவலகத்தின் பரிந்துரை அடிப்படையில், அசோக் லேலண்ட் நிறுவனத்தால் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநா் பயிற்சி இலவசமாக அளிக்கப்படவுள்ளது.

இலகுரக ஓட்டுநா் பயிற்சி 25 நாள்களும், கனரக வாகன இலவச ஓட்டுநா் பயிற்சி 45 நாள்களும் நடத்தப்படும். பயிற்சி முடிந்தவுடன் ஓட்டுநா் உரிமம் வழங்கப்படும். பயிற்சியாளா்களுக்கு இப்பயிற்சி காலத்தில் போக்குவரத்து செலவீனமாக நாளொன்றுக்கு ரூ.100 வீதம் வழங்கப்படும். இதற்கான தகுதியாக 20 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஓட்டுநா் பயிற்சி பெற விண்ணப்பதாரா்கள் தங்களது ஜாதிச் சான்று, ரத்த பரிசோதனை சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படம்-7, வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகம், ஆதாா் அட்டை, பள்ளி மாற்றுச் சான்றிதழ், பள்ளி மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றுடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

SCROLL FOR NEXT