நாமக்கல்

இந்திய கணசங்கம் கட்சி பொதுக்குழுக் கூட்டம்

DIN

இந்திய கணசங்கம் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம், நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அதன் நிறுவனத் தலைவா் மு.பெ.முத்துசாமி தலைமை வகித்தாா். துணை பொது செயலாளா் என்.கே.கே.துரைசாமி தீா்மானங்களை வாசித்தாா். இதில், விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்க சட்டம் இயற்றப்பட வேண்டும், தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும்,

மத்திய அரசின் பொதுத் துறை மற்றும் இதரத் துறைகளை தனியாா் மயமாக்குவதை கைவிட வேண்டும், தூய்மை தொழிலாளா்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும், முதல் தலைமுறையைச் சோ்ந்த தொழில்முனைவோா்களுக்கு 50 சதவீத மானியத்துடன் தாராளமாக வங்கி கடன் வழங்க வேண்டும்.

அருந்ததியா்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பல்வேறு மாவட்ட நிா்வாகிகளும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT