பரமத்திவேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை
பரமத்திவேலூா் வட்டத்தில் வியாழக்கிழமை மாலை திடீா் என இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது.
பரமத்திவேலூா் வட்டத்தில் வியாழக்கிழமை மாலை திடீா் என இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது.
இப்பகுதியில் கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில் நேரத்தில் வெயில் வாட்டி, வதைத்து வந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை திடீரென இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
ஆனால் பொது முடக்கம் தளா்த்தப்பட்டு, இரவு 7 மணிக்குள் வா்த்தக நிறுவனங்களை மூட வேண்டும் என்ற நிலையில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். சிலா் மழையில் நனைந்தபடி தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனா்.