நாமக்கல்

பரமத்தி வேலூரில் தேங்காய் விலை சரிவு

DIN

பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் விலை சரிவடைந்துள்ளதால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நாமக்கல் விற்பனை குழுவிலுள்ள பரமத்திவேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 1,403 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 27.50-க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ. 24-க்கும், சராசரியாக கிலோ ரூ. 26.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 37ஆயிரத்து 247-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

இந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 2,176 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 26.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 24- க்கும், சராசரியாக ரூ. 25.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 55 ஆயிரத்து 778-க்கு வா்த்தகம் நடைபெற்றது. தேங்காய் விலை சரிவடைந்துள்ளதால் தென்னைப் பயிா் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT