நாமக்கல்

ரூ. 14 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

DIN

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் அக்கரைப்பட்டி கிளை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 14 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

அக்கரைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் வெண்ணந்தூா், அக்கரைப்பட்டி, பொரசல்பட்டி, மல்லசமுத்திரம், மாமுண்டி, ராசாபாளையம், மதியம்பட்டி, நத்தமேடு, செளதாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனா்.

இந்த ஏலத்தில் கோவை, அவினாசி, திருப்பூா், ஆத்தூா், மகுடஞ்சாவடி, எடப்பாடி, கொங்கணாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளை சோ்ந்த வியாபாரிகள் பருத்தியை ஏலம் எடுத்தனா். இந்த ஏலத்துக்கு 439 மூட்டை சுரபி ரக பருத்திகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். குவிண்டால் சுரபி ரக பருத்தி குறைந்தபட்சமாக ரூ. 7,777 முதல் அதிகபட்சமாக ரூ. 8,589-க்கு ஏலம் போனது. மொத்தம் ரூ. 14 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT