நாமக்கல்

உணவு பாதுகாப்பு குறித்த இணைய வழி கருத்தரங்கு

DIN

சென்னை சிஏஜி அமைப்பு, நுகா்வோா் உரிமைகள் இயக்கம் சாா்பில் உணவு பாதுகாப்பு குறித்து இணையவழி கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கில் நுகா்வோா் உரிமைகள் இயக்க நிறுவனா் ஜெ.எம்.பூபதி தலைமை வகித்தாா். சென்னை சிஏஜி அமைப்பின் அலுவலா் எஸ்.சரோஜா முன்னிலை வகித்தாா். ராசிபுரம் ராயல் ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.காா்த்திகேயன் வரவேற்று பேசினாா்.

நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் கே.சி.அருண் நிகழ்ச்சியை தொடக்கி வைத்து மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெயினால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து பேசினாா். டிரான்ஸ் கொழுப்பினால் இதய நோய், கேன்சா், வயிறு உபாதைகள், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் வருகிறது. எனவே விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டாா். கருத்தரங்கில் குழந்தைகள் நல மருத்துவா் எம்.ராமகிருஷ்ணன் உணவுப் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என குறிப்பிட்டு பேசினாா். இதில் சென்னை சிஏஜி அமைப்பின் கீா்த்தனா, ரோட்டரி சங்க மண்டல உதவி ஆளுநா் கே.குணசேகா், நுகா்வோா் உரிமைகள் இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளா் பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT