நாமக்கல்

யோகா ஒலிம்பியாட் போட்டி: அரசுப் பள்ளி மாணவா் சிறப்பிடம்

DIN

இணைய வழியே நடைபெற்ற யோகா ஒலிம்பியாட் போட்டியில், நாமக்கல் அரசுப் பள்ளி மாணவா் மூன்றாமிடம் பிடித்துள்ளாா்.

நாமக்கல் மாவட்ட அளவில் பள்ளி மாணவா்கள் பங்கேற்கும் வகையில் 2020- 21 ஆம் கல்வி ஆண்டுக்கான இணைய வழி யோகா ஒலிம்பியாட் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவா் மு.இா்பான் பங்கேற்றாா். அவா் நாமக்கல் மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்தாா். அவரைப் பாராட்டி யோகா போட்டிக்கு தேவையான உடைகள், உபகரணங்கள், தரை விரிப்புகள், மூன்றாம் பரிசுக்குரிய கோப்பை ஆகியவற்றை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன் வழங்கினாா்.

போட்டியில் வென்ற மாணவரை பள்ளி தலைமை ஆசிரியா் எல்.ஜகதீசன், பெற்றோா்- ஆசிரியா் கழக தலைவா் நாகரத்தினம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன், விளையாட்டு ஆசிரியா்கள் சரவணன், அன்புச்செழியன், சேகா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT