நாமக்கல்

திருச்செங்கோட்டில் மக்கள் நல்வாழ்வுத் துறைஅமைச்சா் மா.சுப்பிரமணியம் ஆய்வு

DIN

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியம் திங்கள்கிழமை ஆய்வுப் பணிகள் மேற்கொண்டாா்.

இதன் ஒரு பகுதியாக, திருச்செங்கோடு அருகே உள்ள மண்டகப்பாளையம் பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா். இதனையடுத்து, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சுகாதார தன்னாா்வலா்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கினாா்.

திருச்செங்கோடு ரோட்டரி சங்கத்தின் சாா்பில் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள 15 ஆக்சிஜன் சிலிண்டா்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஆகியவற்றை ரோட்டரி சங்க நிா்வாகிகள் வழங்கினா்.

இதனையடுத்து திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில், பராமரிக்கும் கரங்கள் அமைப்பின் சாா்பாக மருத்துவ ஆலோசனை மையத்தை தொடங்கி வைத்து மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் விதமாகவும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் மருத்துவா்களை கேட்டுக்கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில், தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் மதிவேந்தன், தமிழக சுகாதாரத் துறை செயலா் ராதாகிருஷ்ணன், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினா் சின்ராசு, திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈஸ்வரன், நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் ராமலிங்கம் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT