நாமக்கல்

முழு பொது முடக்கத்தை மீறி செயல்பட்ட விற்பனை நிலையத்துக்கு ‘சீல்’

DIN

முழு பொது முடக்க விதிமுறைகளை மீறியும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் செயல்பட்ட இரும்புக் கம்பிகள் மொத்த விற்பனை நிலையத்துக்கு வேலூா் போலீஸாா், பேரூராட்சியினா் ‘சீல்’ வைத்து எச்சரிக்கை விடுத்தனா்.

கரோனா தொற்றால் தமிழகம் முழுவதும் முழு பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு சிறு தளா்வுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பால், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய மற்றும் அவரச தேவைகளுக்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பரமத்தி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரும்புக் கம்பிகள் மொத்த விற்பனை நிலையத்தில், அனுமதியின்றி விற்பனை செய்ததாக வேலூா் காவல் ஆய்வாளா் லட்சுமணன், வேலூா் பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வகுமாா் ஆகியோா் ‘சீல்’ வைத்து எச்சரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT