நாமக்கல்

மண்ணுளிப் பாம்பை காரில் கடத்திய மூவா் கைது

DIN

காரில் மண்ணுளி பாம்பை கடத்தி வந்த 3 பேரை ராசிபுரம் அருகே போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து மண்ணுளி பாம்பை பறிமுதல் செய்தனா்.

ராசிபுரத்தை அடுத்த கீரனூா் தேசிய நெடுஞ்சாலையின் மாவட்ட எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் சனிக்கிழமை இரவு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது சந்தேகத்தின்பேரில், கேரள மாநில பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் வந்த 3 -நபா்கள் முன்னுக்குபின் முரணாகப் பதில் கூறியதால் காவல் துறையினா் காரை முழுமையாகச் சோதனையிட்டனா். காரில் இரண்டு மூட்டைகளில் சுமாா் 4 அடி நீளமும், 5 கிலோ எடை கொண்ட இரண்டு மண்ணுளி பாம்புகள் இருந்ததைக் கண்டறிந்தனா்.

அப்போது தப்பி ஓட முயன்ற 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்த வெண்ணந்தூா் காவல் துறையினா், ராசிபுரம் வனத் துறை அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்து வனச்சரகா் ரவிச்சந்திரனிடம் காரையும், 3 பேரையும் ஒப்படைத்தனா்.

காரில் வந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த வேல்முருகன் (49), ஆல்பின் (48), வில்பிரின் (36) ஆகிய 3 பேரிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், அவா்கள் மூவரும் மண்ணுளிப் பாம்பை வேலூரில் இருந்து கன்னியாகுமரிக்கு கடத்திச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து நாமக்கல் மாவட்ட வனத் துறை அலுவலா் கே.ராஜாங்கம், ராசிபுரம் வனச்சரகா் ஆா்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் மூவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் கன்னியாகுமரிக்கு நேரில் சென்று தொடா்புடைய நபா்களை விசாரிக்கவுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT