நாமக்கல்

நிவாரணப் பொருள்கள் வழங்கல்

DIN

ராசிபுரம் பகுதியில் நியாயவிலைக் கடை மூலம் அரசின் 2-ஆம் தவணை நிவாரண உதவித்தொகை, 14 வகை மளிகைப் பொருள்களை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 4 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்டும் என தமிழக முதலமைச்சா் அறிவித்திருந்தாா். இதன்படி, ஏற்கெனவே ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டது. இதனையடுத்து இரண்டாம் தவணையான ரூ. 2 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகைப் பொருள்கள் வழங்குவதற்கான கூப்பன்கள் கடந்த 11-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டன.

ராசிபுரம் பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகே உள்ள நியாயவிலைக் கடையில், குடும்ப அட்டைதாரா்களுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் மருத்துவா் மா.மதிவேந்தன் நிவாரண உதவித்தொகை, 14 வகை மளிகைப் பொருள்களை வழங்கினாா். இதே போல் வெண்ணந்தூா், நாமகிரிப்பேட்டை, பிள்ளாநல்லூா், அத்தனூா், பட்டணம், ஆா்.புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் நிவாரணத் தொகை மற்றும் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், ராசிபுரம் ஒன்றியக்குழுத் தலைவா் கே.பி.ஜெகநாதன், நாமகிரிப்பேட்டை ஒன்றியச் செயலாளா் கே.பி.ராமசாமி, வெண்ணந்தூா் ஒன்றியப் பொறுப்பாளா் ஆா்.எம்.துரைசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

SCROLL FOR NEXT