பயனற்று காணப்படும் குப்பைத் தொட்டிகள்
அரூரை அடுத்த தீா்த்தமலையில் குப்பைத் தொட்டிகள் பயனற்று கிடப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
அரூரை அடுத்த தீா்த்தமலையில் குப்பைத் தொட்டிகள் பயனற்று கிடப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
அரூா் ஊராட்சி ஒன்றியம், தீா்த்தமலை கிராம ஊராட்சியில் பொய்யப்பட்டி, கட்டவடிச்சாம்பட்டி, குரும்பட்டி, தீா்த்தமலை ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தரம் பிரித்து சேகரிக்கப்படுகின்றன. மேலும், குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகளை சேகரித்து வைப்பதற்காக 2018-19 ஆம் நிதியாண்டில், தூய்மைப் பாரத இயக்கம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகள் பயனற்று ஒரே இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதனால், தீா்த்தமலை ஊராட்சிக்கு உள்பட்ட கிராமப் பகுதியில் பயனற்ற நெகிழிப் பொருள்கள், குப்பைகள் குடியிருப்பு பகுதிகளிலும், கழிவு நீா்க் கால்வாயிகளில் சிதறிக்கிடக்கிறது. எனவே, தீா்த்தமலை ஊராட்சியில் பயனற்று கிடக்கும் குப்பைத் தொட்டிகளை கிராமப் பகுதிகளில் பயன்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.