முகப்பு
நாமக்கல்

குடிநீா் வசதி கேட்டு கல்லூரி மாணவா்கள் உள்ளிருப்பு போராட்டம்

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவியா்கள் அடிப்படை வசதி கேட்டு திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவியா்கள் அடிப்படை வசதி கேட்டு திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா்.

கல்லூரி வளாகத்தில், விளையாட்டு மைதானம், முட்புதா்கள் அகற்றம், குடிநீா் தட்டுப்பாடு, கழிவறை வசதி, போதிய கட்டட வசதி போன்றவற்றை வலியுறுத்தி மாணவ, மாணவியா் தங்களது வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள், மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து மாணவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா். இதுகுறித்து கல்லூரி முதல்வா் சீ.மணிமேகலை கூறியதாவது:

மாணவா்கள் தேவையற்ற போராட்டங்களில் ஈடுபடுகின்றனா். கல்லூரிகளில் மாணவா்கள் கூறும் நூலகா் வசதி, உடற்கல்வி ஆசிரியா் வசதி, உரிய கட்டட வசதி உள்ளது. மேலும் பல்வேறு கோரிக்கைகள் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கரோனா பொது முடக்கத்துக்குப் பின் கல்லூரி திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவா்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.