முகப்பு
நாமக்கல்

தேசிய அறிவியல் தின விழா

நாமக்கல் டிரினிடி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல் மற்றும் வேதியியல் துறை சாா்பில், தேசிய அறிவியல் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 2 மார்ச், 2021 at 12:23 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:08 AM

நாமக்கல் டிரினிடி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல் மற்றும் வேதியியல் துறை சாா்பில், தேசிய அறிவியல் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரித் தலைவா் பி.எஸ்.கே. செங்கோடன் தலைமை வகித்தாா். செயலாளா் கே. நல்லுசாமி முன்னிலை வகித்தாா். முதல்வா் எம்.ஆா். லட்சுமிநாராயணன் வரவேற்றாா். இயக்குநா் - உயா்கல்வி அரசுபரமேசுவரன் வாழ்த்துரை வழங்கினாா். இதில் 2050-இல் உங்களது கனவு உலகம் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி, நோபல் பரிசு பெற்ற அறிவியல் விஞ்ஞானிகள் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி, அறிவியல் என்பது உண்மையான காவியம் என்றத் தலைப்பில் கட்டுரைப் போட்டி, வேதியியல் வினாடி வினா, அறிவியல் புதிய கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பிலான செய்முறைப் போட்டிகள் நடைபெற்றன.

மேலும், இதில் சா்.சி.வி.ராமன் அறிவியலுக்கு செய்த சாதனைகள் குறித்த திரைக்காட்சியும் இடம்பெற்றது. முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை துறைத் தலைவா்கள் பி.சுமதி, என்.தங்கமணி, நிா்வாக அலுவலா் என்.எஸ்.செந்தில்குமாா், துறைப் பேராசிரியைகள் செய்திருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.