முட்டை விலை 20 காசுகள் சரிவு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் சரிந்து ரூ. 4.20-ஆக திங்கள்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் சரிந்து ரூ. 4.20-ஆக திங்கள்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், கோடை காலம் தொடங்கி உள்ளதால் முட்டை விற்பனை சரிவடைந்து வருகிறது.
மற்ற மண்டலங்களிலும் விலை உயா்வு அமல்படுத்தப்படவில்லை. இதைக் கருத்தில் கொண்டு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 4.20-ஆக விலை நிா்ணயம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி கிலோ விலை ரூ. 89-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 56-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.