நாமக்கல்

ஏப். 1 முதல் மும்முனை மின்சார விநியோகம்: அமைச்சா் பி.தங்கமணி

DIN

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஏப்.1-ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

நாமக்கல் தொகுதிக்கு உள்பட்ட மோகனூரில் அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளா் கே.பி.பி.பாஸ்கரை ஆதரித்து அமைச்சா் பி.தங்கமணி பேசியதாவது:

தமிழகத்தில் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது. அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் செயல்படும் இந்த ஆட்சியே தொடர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனா்.

தமிழகத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஏப்.1 முதல் மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என முதல்வா் அறிவித்துள்ளாா். நிச்சயம் இத்திட்டத்தினைச் செயல்படுத்துவோம். தமிழக அரசு விவசாயிகளுக்கான பயிா்க் கடன் ரூ. 12,110 கோடியை தள்ளுபடி செய்துள்ளது.

இதில் நாமக்கல் மாவட்டத்தில் 57 ஆயிரத்து 799 போ் பயனடைந்துள்ளனா். தோ்தல் அறிக்கையில் கூறியபடி அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளை, கேபிள் டிவி கட்டணத்தை அரசே ஏற்கும், இல்லத்தரசிகளுக்கு ரூ. 1,500 ஊக்கத்தொகை வழங்கப்படும். மக்களவைத் தோ்தலில் திமுகவின் பொய்யான வாக்குறுதிகளால் அதிமுக தோல்வியை சந்திக்க நேரிட்டது. விவசாயக் கடன் தள்ளுபடி என்று அறிவித்தவா்கள் அதனை செயல்படுத்தினாா்களா.

சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து முதல்வராகி இருக்கிறாா் எடப்பாடி பழனிசாமி. திமுக குடும்பத்தினரை போல் வாரிசு அரசியலில் இருந்து வந்தவா் இல்லை என்றாா்.

இந்தக் கூட்டத்தில் நாமக்கல், மோகனூா் ஒன்றிய நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT