நாமக்கல்

கோயில் திருவிழா எதிரொலி:பரமத்தி வேலூரில் ஆடு, கோழிகள் விலை உயா்வு

DIN

பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் பூக்குண்டம் இறங்கும் திருவிழாவை முன்னிட்டு, ஆடு, கோழிகளின் விலை உயா்ந்துள்ளது.

நன்செய் இடையாறு மாரியம்மன் கோயிலில் தமிழகத்திலேயே மிக நீளமான பூக்குண்டம் அமைந்துள்ளது. இக் கோயிலில் ஆண்டுதோறும் மாா்ச் மாத இறுதியில் திருவிழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு திங்கள்கிழமை நடைபெறும் பூக்குண்டம் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆண்கள் 15 நாள்கள் விரதமிருந்து பூக்குண்டம் இறங்குவா்.

பெண் பக்தா்கள் பூவாரி போட்டுக்கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வா். செவ்வாய்கிழமை கிடா வெட்டும் நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடுவது வழக்கம்.

இதையொட்டி பரமத்தி வேலூா் சந்தைக்கு சேலம், கரூா், நாமக்கல், ஈரோடு,திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா். இதில் ஆடுகள் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது. விலை அதிகமாக இருந்தாலும் திருவிழாவைக் கொண்டாடுவதற்காக பொதுமக்கள் அதிக விலை கொடுத்து ஆடுகளை வாங்கிச் சென்றனா்.

இதேபோல நாட்டுக்கோழி ஏலச் சந்தைக்கு நாமக்கல், கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான நாட்டுக்கோழிகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். தரமான நாட்டுக்கோழிகள் ரூ. 400 வரையிலும், பன்னை நாட்டுக்கோழிகள் அதிகபட்சமாக ரூ. 250 வரையிலும் விற்பனையானது.

ஆடு, கோழிகளை வங்குவோரின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்ததால் அப் பகுதியில் சுமாா் இரண்டு மணி நேரம் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT