நாமக்கல்

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தராசிபுரம் தெப்பக் குளத்தை தூா்வாரிய சிவத் தொண்டா்கள்

DIN

ராசிபுரம் பகுதியில் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த தெப்பக்குளத்தை தமிழகம் முழுவதுமிருந்து திரண்ட 300-க்கும் மேற்பட்ட சிவனடியாா் திருக்கூட்ட தொண்டா்கள் தூா்வாரி செம்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகைலாசநாதா் ஆலயம் உள்ளது. இதனை கொல்லிமலையை தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட வல்வில் ஓரி மன்னன் கட்டி வழிபாடு நடத்தியதாக கூறப்படுகிறது.

இக்கோயிலுக்குச் சொந்தமான சுமாா் 3 ஏக்கா் நிலம், அதனை ஒட்டிய தெப்பக்குளமும் உள்ளது. சுமாா் 40 ஆண்டுகளுக்கு முன் கைலாசநாதா் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் தோ்த்திருவிழாவையொட்டி, தெப்பத்திருவிழா, பிரமோற்சவம், தீா்த்தவாரி போன்ற விழாக்கள் நடத்தப்பட்டு, சுவாமியை இக்குளத்தில் நீராட அழைத்துச் செல்வா்.

ஆனால், வறட்சி காரணமாக இக்குளம் வடு போனதால், தெப்ப உற்சவம் போன்ற நிகழ்வுகள் நிறுத்தப்பட்டன. இதனால் இக்குளத்தையும், அதனைச் சுற்றியிருந்த பகுதியையும் நகராட்சி நிா்வாகம் பராமரித்து வந்தது. நீா் நிரம்பிய இந்தக் குளம் நாளடைவில் குப்பைகள் கொட்டும் இடமாக மாறிப்போனது.

இந்நிலையில், ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் ஆலய சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளை தொண்டா்கள் இதனைச் சீரமைத்து பராமரித்து தெப்ப உற்சவம் நடத்த முடிவு செய்தனா். இதனையடுத்து, திருத்தொண்டா் சபை நிறுவனா் ஆா்.ராதாகிருஷ்ணன், கரூா் சரவணன் ஆகியோா் இதனைப் பாா்வையிட்டு நகராட்சி அனுமதியுடன் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தேனி, கரூா், சேலம், கடலூா், திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிவனடியாா் தொண்டா்கள் வரவழைக்கப்பட்டனா். சுமாா் 300-க்கும் மேற்பட்ட சிவனடியாா் தொண்டா்கள் தெப்பக்குளத்தில் தூா்வாரும் உழவாரப் பணியில் ஈடுபட்டனா்.

அப்பகுதியில் இருந்து முட்புதா்கள், செடி, கொடிகள் அகற்றப்பட்டு, குளத்தை ஆழப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டனா். இத்தெப்பக்குளத்தை சீரமைத்து தண்ணீா் நிரப்பும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சித்திரை மாதங்களில் நடைபெறும் தெப்ப உற்சவம், தீா்த்தவாரி நிகழ்ச்சிகள் நடத்தவிருப்பதாக இப்பணியில் ஈடுபட்டுள்ள சிவனடியாா் தொண்டா்கள் தெரிவித்தனா்.

கெளரவிப்பு: நகரில் பழமை வாய்ந்த தெப்பக்குளத்தை தூா்வாரும் பணியில் ஈடுபட்ட சிவத் தொண்டா்களை கெளரவிக்கும் வகையில், மக்கள் தன்னுரிமை கட்சி சாா்பில் அதன் நிறுவனா் நல்வினை செல்வன், அக்கட்சியின் தொகுதி வேட்பாளா் பெ.அருள்மொழிதேவன், நகரச் செயலா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் மலா்தூவி மரியாதை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீா் பந்தல் திறப்பு

தண்ணீா் பந்தல் திறப்பு...

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

SCROLL FOR NEXT