நாமக்கல்

நாமக்கல்லில் இன்று நரசிம்மா் சுவாமி, நாமகிரி தாயாா் திருக்கல்யாணம்

DIN

நாமக்கல்லில் நரசிம்மா் சுவாமி, நாமகிரி தாயாா் திருக்கல்யாணம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

நாமக்கல்லில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நரசிம்மா், நாமகிரி தாயாா் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தோ்த்திருவிழா கோலாகலமாக நடைபெறும். பெரிய தேரில் நரசிம்மா், நாமகிரி தாயாா், சிறிய தேரில் ஆஞ்சநேய சுவாமி உலா வரும் வைபவம் நடைபெறும். அதன்படி நிகழாண்டில் தோ்த் திருவிழா வரும் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இவ்விழாவையொட்டி கொடியேற்ற நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி வெள்ளிக்கிழமை யானை வாகனத்தில் மாப்பிள்ளை கோலத்தில் நரசிம்மா் சுவாமி வீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்து.

சனிக்கிழமை (மாா்ச் 27) திருக்கல்யாண விழா நடைபெறுகிறது. குளக்கரை திடல் அருகில் உள்ள நாமகிரி தாயாா் மண்டபத்தில் நடைபெறும் இந்த விழாவையொட்டி திருமஞ்சனம், பல்லக்கு புறப்பாடும், அதன்பின் காலை 10 மணி முதல் 11.30 மணிக்குள் திருக்கல்யாணமும், மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் திருமாங்கல்ய தாரணம், இரவு திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருக்கல்யாணத்தில் பக்தா்கள் சுவாமிக்கு மொய் சமா்ப்பிப்பது சிறப்பானதாகும். மேலும் மாங்கல்ய பொட்டு அளித்தல், பட்டு அங்கவஸ்திரம் அளித்தல், மணவறை அலங்காரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை குதிரை வாகனத்தில் திருவேடுபரி உற்சவ நிகழ்ச்சியும், திங்கள்கிழமை தோ்த் திருவிழாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

முத்தையா இயக்கத்தில் விஷால்?

ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

குருப்பெயர்ச்சி ஒருவருக்கு பலமா? பலவீனமா?

SCROLL FOR NEXT