நாமக்கல்

முழாம்பழ சாகுபடி பயிற்சி முகாம்

DIN

ராசிபுரம் அருகே உள்ள புதுச்சத்திரம் பகுதியில் பிஜிபி வேளாண் கல்லூரி மாணவியா் முழாம் பழம் சாகுபடி குறித்த பயிற்சி முகாமில் பங்கேற்றனா்.

புதுச்சத்திரம் வட்டார பகுதியில் பிஜிபி வேளாண் கல்லூரி மாணவியா் ஊரக வேளாண் பயிற்சித் திட்டத்தின்கீழ் கிராமப்புறத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனா். புதுச்சத்திரம் வட்டாரப் பகுதியில் முழாம் பழம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் நிலையில், விவசாயிகளிடம் சாகுபடி முறைகள் குறித்து கல்லூரி மாணவியா் கேட்டறிந்தனா்.

ஏா் உழுதல், முகடுகள் அமைத்தல், உரமிடுதல், பாசனம் அமைத்தல், தழைக்கூளம் அமைத்தல், நாற்று நடவு, ஆள்கள் கூலி, களைக்கொல்லி, பூச்சிமருந்து தெளித்தல், பராமரிப்பு போன்றவை குறித்து தாத்தையங்காா்பட்டி செந்தில்குமாா் தோட்டத்தில் பயிற்சி மேற்கொண்டனா். மேலும் பிடாரிப்பட்டி கிராமத்தில் மண் வளம் குறித்தும் மாணவியா் வயல்வெளி பயிற்சி பெற்றனா். இதில் வேளாண்மைத் துறையினா் மாணவியருக்கு செயல் விளக்கமளித்தனா். மாணவியா் ரா.ரஞ்சனி, ஜொ்லின்மேரி, தா.பிரதிபா, சுஜிதா, சுவாதி, பிரியங்கா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT